ETV Bharat / state

தஞ்சையில் குறைந்த அளவில் பேருந்து இயக்கம்.. படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்! - Tnstc Workers Strike

Govt Transport Corporation Employees Strike: கும்பகோணம் மண்டலத்தில் மொத்தமுள்ள 454 பேருந்துகளில், இன்று காலை 10.30 மணி வரை 143 பேருந்துகள் மட்டுமே தற்போது வரை இயக்கப்படுகிறது. கும்பகோணம் மண்டலத்தில் மொத்தமாக 31 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

Govt Transport Corporation Employees Strike
தஞ்சாவூரில் பஸ் குறைந்த அளவில் இயக்கம்; பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் அவதி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 1:54 PM IST

தஞ்சையில் குறைந்த அளவில் பஸ் இயக்கம்

தஞ்சாவூர்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கும்பகோணம் மண்டலம், தஞ்சாவூரில் மொத்தமுள்ள 454 பேருந்துகளில், இன்று காலை 10.30 மணி வரை 143 பேருந்துகள் மட்டுமே தற்போது வரை இயக்கப்படுகிறது.

கும்பகோணம் மண்டலம், தஞ்சாவூரில் மொத்தமாக 31 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பேருந்துகளில் பயணம் செய்ய சுமார் 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகளே பேருந்து நிலையத்திற்கு வருகை புரிகின்றனர்.

மேலும், திருச்சேறை, மாத்தூர், செம்மங்குடி, வண்டுவாஞ்சேரி, நாச்சியார்கோயில், திருநறையூர் போன்ற கும்பகோணம் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இருந்து, கும்பகோணம் மாநகரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்லும் ஊழியர்கள், குறைந்த அளவிலான பேருந்துகள் வருவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், கூட்ட நெரிசல் காரணமாக பேருந்தில் ஏற முடியாமல் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் 90 சதவீதம் பேருந்துகள் இயக்கம்!

கும்பகோணம் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில், தஞ்சை மாவட்டத்தில் இயங்கும் 454 பேருந்துகளையும் தற்காலிக ஓட்டுநர்கள், போக்குவரத்து துறையில் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களைக் கொண்டும் முழுமையாக இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கும்பகோணம் மண்டல பொது மேலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த போராட்டமானது இன்று மதியம் அல்லது மாலையில் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 80 சதவீத பேருந்துகள் பகல் சேவை இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தமிழக மக்கள், இன்று வெளியூர் பயணங்களை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.

முன்னதாக, நேற்று (ஜன.8) மீண்டும் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்து துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், அரசின் பதிலில் திருப்தி ஏற்படாததால், திட்டமிட்டபடி ஜன.9ஆம் தேதியான இன்று முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதன்படி, இன்று (ஜன.9) தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அமைச்சர் அழைத்தால் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் தொழிற்சங்கம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கெடு இருந்தும் மின் இணைப்பை துண்டித்த உரிமையாளர்.. கரூரில் வாடகை வீட்டு குடும்பத்தின் அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.