தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த பனவெளி தெற்குத்தெருவைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவரது மகன் ரத்தினவேல்(29). இவர் 10 வெள்ளாடுகளை வைத்து வளர்த்துவருகிறார்.
மேலும், தனது வீட்டின் முன்பு உள்ள கொட்டகையில் ஆடுகளை கட்டிவைப்பார். இந்நிலையில், இன்று காலை அம்மன்பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் சரண்குமார்(23), விஜயகுமார் மகன் சந்தோஷ்குமார்(22), வெங்கடாஜலபதி மகன் பவித்தரன்(21) ஆகிய மூன்று பேரும் கொட்டகையில் கட்டிவைத்திருந்து ஒரு ஆட்டை திருட முயன்றுள்ளனர்.
இதனைக் கண்ட ரத்தினவேல் உடனே சத்தம்போட்டு அந்த மூன்று பேர்களையும் பிடித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் , அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மூன்று பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.