தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நவகிரக ஸ்தலங்களில் ஒன்றாகவும் ஸ்ரீ ராகுபகவானின் ஸ்தலமாகவும் விளங்கி வருகின்றது. மிகவும் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதனை தொடர்ந்து, செண்டைமேளம் உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து, நாளை 15ஆம் தேதி பத்தாம் நாள் நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளின் திருவீதியுலாவும், சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
இதையும் படிங்க: