தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், பிப்ரவரி 5ஆம் தேதி மத பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், மேலும் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கருதும் இன்னும் 6 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தேசிய புலனாய்வுத் துறை தமிழக காவல்துறையினருடன் இணைந்து, இன்று அதிகாலை கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதியில் உள்ள அப்துல் மஜீத் என்பவர் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர், அவர் வீட்டில் கொலை சம்பந்தமான ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை. மேலும் தலைமறைவாகி உள்ள அப்துல் மஜீத்தை தேடும் பணிகள் தீவிரமாக முடிக்கிவிடப்பட்டுள்ளது. அதேபோல், கும்பகோணம் அடுத்த திருபுவனம் திருமங்கலக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.