தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பேராவூரணி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (45). இவர் நேற்று மாலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கிரி வலத்திற்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் ஜெயபால் வீட்டினுள் லைட் எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஜெயபாலின் உறவினர் குமரேசன் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், அங்கு வந்த குமரேசன் வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள லாக்கர், பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயபால் பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டை பார்வையிட்டு இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலைக்கு சென்ற ஜெயபால் தகவல் தெரிவிக்கபட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். அவர் வந்து பார்த்தால்தான் என்னென்ன பொருட்கள் திருடு போய் உள்ளன என்பது தெரியவரும். மேலும் சினிமாவில் வடிவேலு திருடச் சென்ற இடத்தில் மது அருந்தி சாப்பிட்டுவிட்டு திருடிச் செல்வது போல், அடையாளம் தெரியாத நபர்களும் ஜெயபால் வீட்டில் மது அருந்திவிட்டு திருடிச் சென்றிருக்கிறார்கள்.
இதையும் படிங்க:
மளிகைக் கடைப் பூட்டை உடைத்து அரை மூட்டை வெங்காயம், பணம் கொள்ளை!