ETV Bharat / state

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பெண் காவலர் தீக்குளிக்க முயற்சி! - Trying to fire the female guard in thanjavur

தஞ்சை: காவலர் ஒருவர் தனது கணவனை வெளிநாட்டிற்கு அனுப்ப தெரிந்தவரிடம் கொடுத்த ரூ. 3 லட்சத்த 30 ஆயிரம் பணத்தை மீட்டத்தரக்கோரி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மகன்களுடன் தற்கொலைக்கு முயற்சி செய்யும் பெண் காவலர்
author img

By

Published : Nov 22, 2019, 5:06 PM IST

தஞ்சை வண்டிக்கார தெரு கோரி குளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி நிரோஜா(27) ஊர்க்காவல் படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சங்கர் பெயிண்டர் வேலை பார்த்து வரும் நிலையில், அவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்ப நிரோஜா முடிவுசெய்தார்.

இதனைத் தெரிந்துகொண்ட அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ராஜேந்திரன் குடும்பத்தினர் சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் ரூ. 70 ஆயிரம் சம்பளத்திற்கு தாங்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை நிரோஜாவிடம் வாங்கியுள்ளனர். பின்னர் போலி ஆவணங்கள் மூலம் விசா எடுத்து சங்கரிடம் கொடுத்துள்ளனர். அதை எடுத்தக் கொண்டு சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றபோது அது போலி விசா என்பது இவர்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து நிரோஜா ஆட்டோ ராஜேந்திரனிடம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட நிரோஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இரண்டு மகன்களுடன் தற்கொலைக்கு முயற்சி செய்யும் பெண் காவலர்

இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாததால் இன்று தனது இரண்டு மகன்களுடன் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த நிரோஜா, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே சக காவலர்கள் அவரை அழைத்தக் கொண்டு காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் கூட்டிச் சென்றனர். காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திடீரென பெண் காவலர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காவலர் தேர்வில் வெற்றிபெற்றும் பணிக்கு செல்ல முடியாத இளைஞர்

Intro:
தஞ்சாவூர் நவ 23

3 லட்சம் கொடுத்து ஏமாந்த
பெண் காவலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு மகன்களுடன் வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுBody:

தஞ்சை வண்டிக்கார தெரு கோரி குளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் இவரது மனைவி நிரோஜா வயது 27 ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சங்கர் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் தனது கணவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் முடிவில் நிரோஜா இருந்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ராஜேந்திரன் அவரது மனைவி கல்பனா அவர்களது மகன் அருண் ஆகியோர் சங்கரை சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்திற்கு ரூ 70 ஆயிரம் சம்பளத்திற்கு தாங்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ 3 லட்சத்து 30 ஆயிரம் வாங்கியுள்ளனர். இந்நிலையில் போலி ஆவணங்கள் மூலம் விசா எடுத்து சங்கரிடம் கொடுத்துள்ளனர். அதனைக்கொண்டு சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்ற சங்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது போலி விசா என்பது தெரியவந்தது. இதையடுத்து நிரோஜா தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆட்டோ ராஜேந்திரனிடம் ரூ 3 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் பணத்தை தராமல் ஆட்டோ ராஜேந்திரன் அவர்களை ஏமாற்றி உள்ளார். இதை அடுத்து கடந்த 10.8.2019 அன்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் இடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தாலுகா போலீஸ் ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்து புகாரை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதனை விசாரித்த தாலுகா போலீஸ் ஆய்வாளர் ஆட்டோ ராஜேந்திரனை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரிடமிருந்து பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. இதையடுத்து நிரோஜா தனது 2 மகன்களுடன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றியுள்ளார். அதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் அழைத்துச் சென்றனர். பெண் காவலர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.