ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா: முன்னேற்பாடுகள் தீவிரம்

author img

By

Published : Feb 4, 2020, 11:51 PM IST

Updated : Feb 4, 2020, 11:57 PM IST

தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நாளை நடைபெறுவதால் முன்னோற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

kudamuluku-festival
kudamuluku-festival

முன்னேற்பாடுகள்:

ராஜராஜ சோழன் கட்டியெழுப்பிய தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் பிப். 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தஞ்சை கோயில் கோபுரம் முதல் யாகசாலை வரை முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுவதால் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயிலின் வெளிப்புறத் தோற்றம்

அதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 275 இடங்களில் தூய குடிநீர் தொட்டிகள், 238 தற்காலிகக் கழிப்பிடங்கள், போக்குவரத்திற்காக நகர் பகுதியில் மட்டும் 250க்கும் மேற்பட்ட இலவச பேருந்துகள், 21 இடங்களில் சிறப்புக் கார் பார்க்கிங் வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக சுவாமி தரிசனம் செய்ய 300க்கும் மேற்பட்ட இரு சக்கர நாற்காலிகள், கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் 13 பட்டிகள், முதலுதவிக்காக 28 ஆம்புலன்ஸ்கள், 21 நடமாடும் மருத்துவ முகாம்கள், இருசக்கர ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சை பெரிய கோயிலில் முன்னோற்பாடுகள் தீவிரம்

தஞ்சாலவூரில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 300 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவல் துறையினர் பக்தர்களை கவனித்துவருவார்கள். அதற்காக 10 மாவட்டங்களிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

தீவிர கண்காணிப்பில் தஞ்சை பெரிய கோயில்

தீயால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக (fire reductions solution) என்ற தீ தடுப்பு தீரம் கலந்து யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை 157 டிகிரி வரை வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும், எளிதில் தீ பற்றாது. 216 அடி கொண்ட ராஜ கோபுரத்தில் புனித நீர் கொண்டு செல்ல அதிநவீன சூழல் மேஜை ஏணி கொண்ட வாகனம், இது 300 அடி உயரம் வரை செல்லும்.

குடமுழுக்கு பற்றி பெரியகோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளா் பெ.மணியரசன்
தமிழ் மற்றும் சமஸ்கிருத குடமுழுக்கு:

11 ஆயிரத்து 900 ஆயிரம் சதுரடியில் பெருவுடையார், பெரியநாயகி, பரிவார தெய்வங்களுக்கு யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 22 வேதிகைகளும், 110 குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இன்று எட்டுகால யாகசாலை, விக்னேஸ்வர பூஜை தொடங்கியது.

அதைத்தொடர்ந்து நாளை 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, 80 ஓதுவார்கள் தமிழில் பன்னிரு திருமுறைகள், தேவராம் திருவாசகம் ஓதி யாகசாலை பூஜை நடைபெறும். இந்த யாகசாலை பூஜையில் நவதானியங்கள், பட்டு வஸ்திரங்கள், பழ வகைகள், 140 வகையான மூலிகைப் பொருட்கள் பயன்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து புதன் கிழமை அதிகாலை 4:30 மணிக்கு எட்டாம் கால யாகபூஜை நடந்தபட்டு காலை 9 மணி முதல் 10:30 மணிகுள் ராஜ கோபுரம் உட்பட அனைத்து கோபுரத்திலும் புனித நீர் ஊற்றப்படவுள்ளது.

இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு - ஈடிவி பாரத் நேரலை!

Intro:தஞ்சாவூர் ஜன 04

23 ஆண்டுகளுக்கு பிறகு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா நாளை நடக்கவுள்ளது இதற்காக தஞ்சை தயார் நிலையில் உள்ளது

Visual through live kit file name : thanjavur big temple
எனது p to c யும் அனுப்பட்டுள்ளது பயன்படுத்தி கொள்ளவும்Body:.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நாளை நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு செய்யப்பட்டு 5 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்காக 275 இடங்களில் தூய குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது 238 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது, நகர் பகுதியில் மட்டும் 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட உள்ளன சிறப்பு கார் பார்க்கிங் நிறுத்தம் 21 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது மாற்றுத்திறனாளிகளும் வெளியில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் 300க்கும் மேற்பட்ட இரு சக்கர நாற்காலி தயார் நிலையில் உள்ளது கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் 13 கூண்டுகள் அமைக்கபட்டு பகுதி பகுதியா பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் தயார் நிலையில் மேலும் கூட்ட நெரிசலில் ஏதேனும் பக்தர்களுக்கு முதலீடு செய்யும் நிலை ஏற்பட்டால் 28 ஆம்புலன்ஸ் வாகனம் 21 நடமாடும் மருத்து முகாம் இருசக்கர ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதாக சுகாதார துறையில் தெரிவிக்கின்றன வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில்

வர வாய்ப்பு உள்ளதால் அவர்களிடம் இருந்து கொரோனா போன்ற வைரஸ் தாக்காமல் இருக்கும் வகையில் அவர்கள் விமான நிலையதிலே தீவிர சோதனையில் ஈடுபடுத்தபட்டு அதன் பின் பெரிய கோவிலில் வரும்போது அவர்களுக்கு ஏதேனும் காயங்கள் இருமல் சளி போன்ற உபாதைகள் இருந்தால் உள்ளே எல்ல அனுமதிக்க மாட்டார்க்கள் என மருத்து நிர்வாகம் தெரிவிக்கின்றன,
தஞ்சை மாவட்டம் முழுமையாக
நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது காவல் துறையினரும் 300 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டு கண்கானிக்கபடுகிறது 10 மாவட்டகளில் இருந்து மாவட்ட கா வல் கண்காணிப்பாளர்கள் என 5 ஆயிரத்தின்கு மேலாக போஸீசார் பாதுகாப்பு கணியில் உள்ளனர் கடந்த 1997 ம் ஆண்டு யாகசாலையில் ஏற்பட்ட தீயால் ஏற்கட்ட அசம்பாவிதங்கள் தடுக்கும் விதமாக (fire reductions solution) தீ தடுப்பு தீரம் கலந்து யாக சாலைகள் அமைக்கபட்னுள்ளன அதாவது 157 டிகிரி வரை வெப்பத்தை தாங்கி தீ எளிதில் பற்றாத அளவிற்கு யாக குண்டங்கள் அமைக்கபட்டுள்ளது மேலும் வெளிநாட்டு கட்டுமானதில் அதிநவீன சூழல் மேஜய் ஏணி கொண்ட ஊர்தி 300 அடிக்கு க்கு செல்ல கூடிய வாகனம் 216 அடி கொண்ட ராஜ கோபுரதில் புனித நீர் கொண்டு செல்லும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் மற்றும் புனித நீரை மக்கள் மீது தெளிக்கவுதம் தயார் நிலையில் உள்ளது.

தமிழ் மற்றும் சமஸ்கிருத குடமுழுக்கு :

எட்டு கால யாகசாலை பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது 11.900 ஆயிரம் சதுர அடியில் பெருவுடையார், பெரியநாயகி, பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியாக யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு அதில் 22 வேதிகைகளும், 110 குண்டங்கள் அமைக்கப்பட்டு 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க,
80 ஓதுவார்கள் தமிழ் பன்னிரு திருமுறைகள், தேவராம் திருவாசகம் ஓதி யாகசாலை பூஜை நடைபெருகிறது . இந்த யாக சாலை பூஜையில் நவதானியங்கள், பட்டு வஸ்திரங்கள், பழ வகைகள், 140 வகையான மூலிகைகளை கொண்டு இந்த யாக சாலையில் பூஜை நடபெருகிறது தொடர்ந்து புதன் கிழமை காலை 4:30 மணிக்கு எட்டாம் கால யாக பூஜை நடந்தபட்டு 9 மணி முதல் 10:30 மணிகுள் ராஜ கோபுரம் உட்பட அனைத்து கோபுரதிலும் புனித நீர் ஊற்ற பட உள்ளனர் .

Conclusion:Sudhakaran 9976644011
Last Updated : Feb 4, 2020, 11:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.