கஜா புயலின் போது கடும் பாதிப்புக்குள்ளான பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சிவ கொள்ளையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமான வீடு இடிந்து விழுந்தது. புயல் அடித்தது இரவு நேரம் என்பதால் வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த வேல்முருகனின் மகன்கள் சதீஷ்குமார், ரமேஷ்குமார், தினேஷ்குமார் ஆகிய மூன்று பேர், வேல்முருகனின் உறவினரின் மகன் அய்யாதுரை ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அக்கம்பக்கத்தினர் முற்பட்டனர். ஆனால் கஜா புயலால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் விழுந்து சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் உயிருக்குப் போராடிய அந்த நால்வரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால் நால்வரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் மிகுந்த வேதனை அடையச் செய்தது. இச்சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இறந்த அந்த நான்கு பேரின் படத்திற்கு மலர்தூவி அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: கஜா கடந்து ஓராண்டு முடிந்தது.... மீண்டதா சோழநாடு?