ETV Bharat / state

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வுசெய்த மேயர்... விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை - Smart City

மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த தஞ்சாவூர் மேயர் ராமநாதன், பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டார்.

மேயர் ஆய்வு
மேயர் ஆய்வு
author img

By

Published : Jan 29, 2023, 5:55 PM IST

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தீவிரம்.. மேயர் ஆய்வு

தஞ்சாவூர்: மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் கூட்டம் மேயர் ராமநாதன் தலைமையில் கடந்த 27ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் கோபால், தேரோடும் ராஜவீதிகளில் கழிவுநீர் சாக்கடைகளில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவித்தார்.

மேலும் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாகவும் அதனால் பொது மக்கள் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு ஆளவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து மேயர் ராமநாதன் கடந்த 28ஆம் தேதி அந்தந்த வார்டுகளில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது பல இடங்களில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தது தெரிய வந்தது. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமலும் இருந்தது. இதையடுத்து பணிகளை வரும் மார்ச் மாதத்திற்குள் விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் மேயர் ராமநாதன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் 956 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைப்பு, குளம் சீரமைப்பு, பூங்கா புதுப்பித்தல், சோடியம் விளக்கு, கண்காணிப்பு கேமரா பொருத்துதல், அகழி சீரமைப்பு, சாலை மேம்பாடு உள்ளிட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ராஜவீதிகளில் நடைபெற்று வந்த நிலையில் அதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் முடிக்கப்படாமல் பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேயர் ராமநாதன் முடிவுறாத பணிகளை நேரில் சென்று, ஆய்வு செய்து விரைந்து முடிக்குமாறு தெரிவித்தார். இந்த ஆய்வின் போது வார்டு உறுப்பினர்கள் கோபால் மேத்தா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: 'நடைபயிற்சி செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும்' - குழந்தைகள் உரிமை ஆர்வலர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.