ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரத்தநாடு அருகில் உள்ள தென்னமநாட்டில் அதிக அளவில் மக்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் டிஐஜி லோகநாதன் அப்பகுதிகளில் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு பணியில் இருந்த காவல் துறையினருக்கு பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கினார். பின்னர் கை உறை இல்லாத காவலர்களுக்கு கை உறை வழங்கி பணியில் இருக்கும் அனைவரும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதனையடுத்து அந்த வழியாக மாற்றுத்திறனாளி ஒருவர் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தார். டிஐஜி அவர்களிடம் உங்களை போன்றவர்கள் பத்திரமாக வீட்டில் இருக்க வேண்டும் இனிமேல் இதுபோன்று வரக்கூடாது என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்.
இந்த நள்ளிரவு நேரத்திலும் டிஐஜி வந்து தங்களுக்கு ஊக்கமளித்து சென்றது எங்களை உற்சாகப்படுத்தியிருப்பதாக பணியில் இருந்த காவலர்கள் கூறினார்கள்.
இதையும் படிங்க: மதுரையில் கனமழை - கார் மேல் விழுந்த பழமையான மரம்