கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்டங்களை இயற்றிய மத்திய அரசை கண்டித்து தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.
விவசாயிகளை ஒடுக்கும் வகையில் தடியடி நடத்தியும், குண்டு வீசியும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி பஸ் ஸ்டாண்ட் எதிரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் மீது தடியடி தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க...விவசாயிகள் போராட்டம்: பாஜக தலைவர் வீட்டில் ஆலோசனை