இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஊரகப்பகுதிகளில் கரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் விதமாக அனைத்து அலுவலகங்கள், பணித்தளங்கள், பள்ளிகள், சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமி நாசினி தொடர்ந்து தெளித்து பராமரிக்கப்படுகிறது.
மேலும், அனைத்து பணியாளர்கள், பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்திடவும் அனைவரும் முகக்கவசம் அணிந்திடவும் ஏற்கனவே தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தொற்று நோய்த்தடுப்பு சட்டம் 1997 விதி 2 - இன் படியும் அரசாணை (நிலை) எண் 347 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை பத்தி எண் 19-இன் படியும் தஞ்சாவூர் மாவட்ட ஊரகப்பகுதிகளில் கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறும் விதமாக முகக்கவசம் அணியாமல் பணித்தளங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில் நடமாடும் பொதுமக்களுக்கு ஊராட்சி தீர்மானத்தின் அடிப்படையில் அபராத கட்டணமாக ரூ . 100 விதித்து வசூலித்திடவும், வசூலிக்கப்பட்ட அபராத தொகையினை ஊராட்சி பொது நிதிக்கணக்கில் செலுத்திடவும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அனைவரும் முகக்கவசம் அணியவும் தகுந்த கடைப்பிடித்திடவும் அரசின் விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு கோடிக்கும் மேலான மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம் - ஸ்டாலின் பெருமிதம்