ETV Bharat / state

8 நிமிடத்தில் 100 திருக்குறள் கூறி சாதனை - தஞ்சையில் நான்கரை வயது சிறுவனுக்குக் குவியும் பாராட்டுகள்..! - 8 நிமிடத்தில் 100 திருக்குறள் கூறி உலக சாதனை

Cholan Book of World Record: தஞ்சாவூரில் 8 நிமிடத்தில் 100 திருக்குறளை ஒப்புவித்த நான்கரை வயது சாதவ் என்ற சிறுவன் 'சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' மூலம் உலக சாதனை படைத்தார். மேலும், சிறுவனுக்கு மாநகராட்சி மேயர் உள்ளிட்டப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

thanjavur-boy-sadhav-breaks-world-record-by-doing-100-tirukkurals-in-8-minutes
8 நிமிடத்தில் 100 திருக்குறள் கூறி உலக சாதனை..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 6:33 PM IST

Updated : Dec 9, 2023, 6:48 PM IST

8 நிமிடத்தில் 100 திருக்குறள் கூறி உலக சாதனை..!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சேர்ந்தவர்கள், பாலகணேசன்- செல்வமணி தம்பதியினர். பாலகணேசன் விவசாயத் தொழில் பார்த்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ஒரு மகளும், நான்கரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்களது, நான்கரை வயதான சாதவ் என்ற மகன், அப்பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். இந்த வயதில் திருக்குறள் படிப்பதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

8 நிமிடத்தில் 100 திருக்குறள் கூறி உலக சாதனை: இதனையடுத்து, அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கத்தின் காரணமாகத் திருக்குறளை மனப்பாடமாக கற்றுத் தேர்ந்துள்ளார். இதனையடுத்து, உலக சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக இன்று (டிச.9) தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமநாதன், 'சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' (Cholan Book of World Records) மண்டல தலைவர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் முன்னிலையில் 100 திருக்குறளை மனப்பாடமாக 8 நிமிடத்தில் எடுத்துக் கூறி சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மூலம் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

பின்னர், இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மேயர் ராமநாதன் மற்றும் சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பள்ளிச் சிறுவன் சாதவ்-க்கு வழங்கியதோடு அவரை வெகுவாகப் பாராட்டினர். மேலும், 8 நிமிடத்தில் 100 திருக்குறளைக் கூறி அசத்திய சிறுவனை அவரது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்த்தினர்.

புத்தகம் படிப்பதிலே ஆர்வம்: இது குறித்து சிறுவனின் அம்மா செல்வமணி கூறுகையில், "திருக்குறளை எல்கேஜி படிக்கும்போதே பள்ளி ஆசிரியர்கள் கற்றுத் தந்தனர். இதனால், தனது மகன் சாதவ்-க்கு திருக்குறள் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதாகவும், இதற்காகக் கடந்த 2 மாதமாகப் பயிற்சி எடுத்து, தற்போது 100 திருக்குறளை 8 நிமிடத்தில் மனப்பாடமாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.

சிறுவனுக்குக் குவியும் வாழ்த்துகள்: யுகேஜி படிக்கும் பள்ளிச் சிறுவனின் இந்த செயல் சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் திருக்குறளின் முக்கியத்துவம் பல இடங்களில் திருக்குறள் வகுப்புகள், ஒப்புவித்தல் மற்றும் போட்டிகள் நடத்தப்படுவது அதிகமாகக் காணப்படுகிறது.

இந்நிலையில், சமீபகாலமாக செல்போன்களில் பிடியில் சிக்கித் தவிக்கும் சிறு குழந்தைகளுக்கு மத்தியில் கையில் புத்தகத்தை எடுத்து அறிவின் வளர்ச்சிப்பாதையில் சிறுவன் செல்வதற்குக் காரணமாகத் திகழும் அவரது பெற்றோரையும், ஆசிரியர்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல் பெண்ணாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Last Updated : Dec 9, 2023, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.