ETV Bharat / state

கும்பகோணத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் - ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாணவிகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 9:48 AM IST

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணம் தனியார் பள்ளியில் ஆசிரியர் தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

teachers-day-celebration-in-kumbakonam
ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

தஞ்சாவூர்: ஆசிரியர் தினமாக போற்றப்படும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் நேற்று விமரிசைாக கொண்டாடப்பட்டது. கும்பகோணம் தனியார் பள்ளியில், ஏராளமான மாணவ மாணவியர்கள் ஒன்று திரண்டு வரிசையாக தங்களது ஆசிரியர்களுக்கு, மலர் கொத்து கொடுத்து, ஆசிரிய தின வாழ்த்து கூறி அவர்களிடம் நல்லாசியும் பெற்று மகிழ்ந்தனர்.

தலைசிறந்த தத்துவஞானியும், இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவருமான, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 05ம் நாள் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது, அதன்படி மத்திய மற்றும் மாநில அரசு, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் இந்நன்னாளில், தேசிய மற்றும் மாநில நல்லாசிரியர் விருதுகளை வழங்கி பாராட்டி கவுரவித்து வருகிறது.

1962ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் நாளை இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு குழந்தைகளுக்கும், இரண்டாவது பெற்றோராக விளங்கி அவர்களை பேணி காத்து வாழ்வில் உயர அவர்களுக்கு நல்வழி காட்டுகின்றனர். மேலும் வாழ்க்கை என்ற பாடத்தை கற்றுத் தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாகுவதே ஆசிரியர்களின் அயராத பணியாகும்.

இத்தகைய ஆசிரியர்களை போற்றி பெருமைப்படுத்தும் விதமாக கும்பகோணம் தனியார் பள்ளியில், ஏராளமான மாணவ மாணவியர்கள் ஒன்று திரண்டு, தங்களது ஆசிரியர்களுக்கு மலர் கொத்து கொடுத்து ஆசிரிய தின வாழ்த்துகளை கூறி அவர்களிடம் நல்லாசியும் பெற்று மகிழ்ந்தனர்.

இதனையடுத்து அன்றைய கால கட்ட மாணவர்களின் நிலை, இன்றைய கால கட்டத்தில் மாணவர்களின் நிலை ஆகியவை குறித்தும், மாணவ மாணவியர்கள் நல்லொழுக்கங்கள் பின்பற்றி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நாடகம் மூலம் நடித்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் பள்ளி முதல்வர் அம்பிகாபதி. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் இருபால் ஆசிரிய பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பட்டியலின பெண் சமைப்பதால் காலை உணவு திட்டம் புறக்கணிப்பா? அரசுப் பள்ளியில் கொடூரம்! சாட்டையை சுழற்றிய மாவட்ட ஆட்சியர்! நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.