ETV Bharat / state

டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ. 3.90 லட்சம் கொள்ளை - Liquor Shop Money Theft InThanjavur

தஞ்சாவூர்: மதுபானக்கடை ஊழியர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி 3 லட்சத்து 90ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tasmac Money Theft In Thanjavur
Tasmac Money Theft In Thanjavur
author img

By

Published : Dec 17, 2019, 7:54 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் விளார் சாலையில் அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. நேற்று இரவு மதுப்பானக்கடையில் பணியில் இருந்த விற்பனையாளர் சிவக்குமார், சீனிவாசன் ஆகியோர் மது விற்பனையான பணத்தை கணக்கு பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மதுபானக்கடை வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கல்லால் தாக்கி உடைத்தனர். இதையடுத்து, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடையின் பக்கவாட்டு கதவு வழியாக உள்ளே புகுந்து ஊழியர்களிடமிருந்து மூன்று லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

தொடர்ந்து, ஊழியர்கள் கொள்ளையர்களை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இது குறித்து, மேற்பார்வையாளர் பாஸ்கரன் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதுபானக்கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மதுபான கடை திருட்டு

அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் மதுபானக்கடையில் கொள்ளையடித்த நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

சாராயம் கேட்டு தன்னைத்தானே பாட்டிலால் தாக்கிக் கொண்டவர் கைது!

Intro:

தஞ்சாவூர்,டிச.17 –

தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி 3.90 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்Body:
தஞ்சை விளார் சாலையில் அரசு டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. லேஸ்மேன் சிவக்குமார், சீனிவாசன் ஆகியோர் விற்பனையான பணத்தை கணக்கு பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது டூ விலரில், முகத்தில் கர்சீப்பை கட்டிய மர்ம நபர்கள் 3 பேர், டாஸ்மாக் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கல்லால் தாக்கி உடைத்தனர். இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடையின் பக்கவாட்டு கதவு வழியாக உள்ளே புகுந்து, ஊழியர்களிடம் கத்தி, அரிவாளைக் காட்டி மிரட்டி 3.90 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடினார். அவர்களை விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை.
இது குறித்து, சூப்பர்வைசர் பாஸ்கரன் தாலுக்கா போலீசுக்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., மகேஸ்வரன், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டாஸ்மாக்கை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.