ஆறு பயங்கரவாதிகள் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததாக உளவுத்துறை எச்சரித்ததால், உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்லக்கூடிய நிலையில், இரண்டாவது நாளாக இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோபுரங்கள், நுழைவாயில்களிலும் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும், பக்தர்களின் உடைமைகள், அவர்களுடைய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.