தஞ்சாவூர்:அர்ஜென்டினா, கனடா, சீனா, இந்தியா, பிரேசில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் உள்ளடக்கிய ஜி 20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. ஓராண்டுக்கு இந்தியா இந்த தலைமை பொறுப்பை வகிக்கும்.
இதனை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் உள்ள 100 பாரம்பரிய சின்னங்கள் மற்றும் உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் ஜி-20 அடையாள சின்னத்துடன் நாட்டின் வளர்ச்சியை குறிக்கும் விதமாக தாமரை சின்னத்துடன் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தஞ்சை பெரியகோவில் கோட்டை சுவற்றில் ஜி 20 மாநாடு சின்னத்தை புரஜெக்டர் மூலம் பிரதிபலிப்பதுடன், தஞ்சை பெரிய கோவில் சுற்றுச்சுவர் வெள்ளி நிறங்களில் ஜொலிக்க விடப்பட்டுள்ளது.
இந்த விளக்கு நேற்று (டிச.1) முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஒளிர விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோயிலை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்தனர்.
இதையும் படிங்க:சினிமா தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பால் மரணம்