தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வழியாக சிதம்பரம் செல்லக்கூடிய தனியார் பேருந்து ஒன்று கோடி அம்மன் கோயில் பகுதியில் திடீரென திரும்ப முற்பட்டபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பிரேக் அடித்தும், பேருந்து நிற்காமல் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் - மனைவி இருவரும் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தஞ்சை போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்துக்கான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.