தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் செம்மங்குடியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான திரௌபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மிகவும் பழமையான வெண்கலத்தாலான சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட அர்ஜுனன், திரௌபதியம்மன் சிலைகள், சிறியளவிலுள்ள கிளி சிலை இருந்தன.
இந்நிலையில் மே 18ஆம் தேதி இரவு கோயில் பூசாரி செல்வம் மதிய பூஜைகளை முடித்து, கோயிலை பூட்டிவிட்டு சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் கதவை உடைத்து மூன்று சிலைகளை திருடிச் சென்றனர்.
இது குறித்து கோயில் நிர்வாகி மாரிமுத்து, நாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வெண்கலத்தாலான மூன்று சிலைகளின் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் ஆகும்.