இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தினரால் 2009ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
அதன் 12ஆம் ஆண்டு நினைவு தினத்தை, தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் அதன் பேரியக்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தினர்.
இதுகுறித்து தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறுகையில், "இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இன்றும் இலங்கை ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதால், இலங்கைத் தமிழர்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை அரசு தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் - டி. ராஜா