ETV Bharat / state

திருவையாறு தியாகராஜர் ஆராதனை இன்று தொடக்கம்! - Tiruvaiyaru Thyagaraja aradhana

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா இன்று மாலை தொடங்குகிறது.

திருவையாறு தியாகராஜர் ஆராதனை இன்று தொடக்கம் திருவையாறு தியாகராஜர் ஆராதனை தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் ஜி கே வாசன் Thyagaraja aradhana Tiruvaiyaru latest news Tiruvaiyaru Thyagaraja aradhana Sri Thyagaraja aradhana started Today

author img

By

Published : Feb 1, 2021, 11:59 AM IST

தஞ்சாவூர்: திருவையாறு தியாகராஜர் ஆராதனை திங்கள்கிழமை (பிப்.1) மாலை தொடங்குகிறது.
திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 174ஆவது ஆராதனை விழா இன்று மாலை 4.30 மங்கல இசையுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து 5 மணிக்கு 174ஆவது ஆராதனை தொடக்க விழா நடைபெறுகிறது.

இவ்விழாவிற்கு தியாகப்பிரம்ம சபை தலைவர் ஜி.கே. வாசன் தலைமை வகிக்கிறார். சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்று பேசுகிறார். மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், அறங்காவலர்கள் கலந்துகொள்கிறார்கள். சபை செயலாளர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் நன்றி கூறுகிறார். அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணிவரை இசைநிகழ்ச்சி நடக்கிறது.
மறுநாள் 2ஆம் தேதி காலை 5.30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை நடக்கிறது. விழா பந்தலில் 8.30 மணி முதல் 9.00 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து 9 மணிக்கு அனைத்து இசைகலைஞர்களும் ஒன்று சேர்ந்து பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செய்வார்கள்.

அப்போது தியாகராஜர் சிலைக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 10 மணிமுதல் 11 மணிவரை இசை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிமுதல் 8 மணிவரை இசை நிகழச்சி நடக்கிறது. முன்னதாக இரவு 7.30 மணிக்கு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம் நடக்கிறது. இரவு ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகைள சபை தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தியாகராஜர் திருக்கோயிலில் ’நாட்டியாஞ்சலி’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.