ETV Bharat / state

கீற்றுக் கொட்டகை டூ கலெக்டர் ஆபிஸ்: இளைஞனின் சாகசப் பயணம்! - தஞ்சை இளைஞனின் சாகசப் பயணம்

தஞ்சாவூர்: பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து கஷ்டப்பட்டு படித்து தற்போது சார் ஆட்சியராகவுள்ள சிவகுரு பிரபாகரனின் பின் ஒரு பெரும் போராட்டத்தின் கதையேவுள்ளது.

Sivaguru Prabhakaran
Sivaguru Prabhakaran
author img

By

Published : Dec 16, 2019, 8:12 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஒட்டங்காடு. இப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து - கனகா தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் சிவகுரு பிரபாகரன்.

பொருளாதார சூழ்நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பத்திலிருந்து கீற்றுக் கொட்டகையாலான வீட்டிலேயே வசித்துவந்தார். பிரபாகரனின் தந்தை மாரிமுத்து சொந்தமாக மர ஆலை ஒன்றையும் நடத்திவந்தார்.

போதிய வருமானம் இல்லாததால் சிவகுரு பிரபாகரன், தன் வீட்டில் எதிர்புறம் உள்ள அரசுப்பள்ளியில் தனது ஆரம்ப கல்வியையும் பின் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தனது ஊர் அருகே உள்ள பள்ளியிலும் படித்து பள்ளிப் படிப்பை முடித்தார்.

பள்ளியிலே முதல் மதிப்பெண் பெற்ற சிவகுரு பிரபாகரனுக்கு பொறியாளர் ஆக வேண்டும் என்பதே கனவு. இருந்தபோதும் குடும்பத்தின் நிலையைப் புரிந்துகொண்ட அவர், புதுக்கோட்டையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். ஒருகட்டத்தில் தினசரி பேருந்து கட்டணமான ரூபாய் ஐம்பதும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படவே, பிரபாகரன் தனது தாயின் சகோதரி வீட்டில் தங்கி கல்லூரி படிப்பை முடித்தார்.

கீற்றுக் கொட்டகை டூ கலெக்டர் ஆபிஸ் - இளைஞனின் சாகசப் பயணம்

பின் நண்பர் ஒருவர் உதவவே, வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகள் படித்துக்கொண்டே ஐஐடியில் சேர்வதற்காக பயிற்சி பெற்ற இவர், ஐஐடி நுழைவு தேர்வில் தேர்ச்சிப்பெற்று எம்.டெக் படிப்பையும் முடித்தார்.

அதன்பின் ஜேஆர்எஸ்ஸில் தேர்ச்சிப்பெற்று இந்திய ரயில்வே துறையில் சிறிதுகாலம் பணியாற்றினார். பின்னரும் முயற்சியைக் கைவிடாத சிவகுரு பிரபாகரன், இந்தியக் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் சார் ஆட்சியராகப் பணியாற்றிவருகிறார்.

'குடும்ப சூழ்நிலையை உணர்ந்துகொள், படித்தது போதும் வேலைக்குச் செல்' என தாய் அடிக்கடி வற்புறுத்திய நிலையிலும் தன்னம்பிக்கையோடு போராடி புதியதொரு உயரத்தைத் தொட்டுள்ளார் சிவகுரு பிரபாகரன்.

இதுமட்டுமில்லாமல் அப்பகுதி இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சிவகுரு பிரபாகரன், தன்னார்வ இளைஞர்களுடன் சேர்ந்து மரக்கன்று நடுதல், ஊர் குளத்தை சுத்தம் செய்தல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.

இதையும் படிங்க: மீண்டும் உயிர் பெறுமா உப்பளத்தொழில்?

Intro:தஞ்சாவூர் டிச 01Body:தன் மகனை கீற்று பின்னியும் பால் மாடு வைத்தும்தான் படிக்க வைத்தேன் அரசு பள்ளியில் பயின்று திருநெல்வேலி சப் கலெக்டராக இருந்து வரும் தஞ்சாவூரை சேர்ந்த சிவகுரு பிரபாகரனின் தாய் பெருமிதம் (சிறப்பு செய்தி )

தஞ்சாவூர் மாவட்ட பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஒட்டங்காடு மேற்கு பகுதியை சேர்ந்த மாரிமுத்து கனகா தம்பதியாரின் மூத்த மகனான சிவகுரு பிரபாகரனுடன் ஒருமகனும் ஒரு மகளும் இருகின்றனர்.
அரம்பதில் பொருளாதார சூழ்நிலையில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தின் மூத்த மகனின் நிலை நாமறிந்ததே ஆரம்பத்திலிருந்து கீற்றுக் கொட்டகையாளால் ஆன வீட்டில் வசித்து வந்துள்ளனர் தந்தை மாரிமுத்து சொந்தமாக மரமில் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் போதிய வருமானம் இல்லாததால் அக்குடும்பம் சிரமத்தை சந்தித்து வந்துள்ளது இவர்களின் மகனான சிவகுரு பிரபாகரன் அவர்கள் வீட்டில் எதிர்புறம் உள்ள அரசு பள்ளியில் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்து வந்துள்ளார் கல்வியில் அதிக நாட்டம் கொண்ட சிவகுரு பிரபாகரன் தனது ஆரம்பக் கல்வியை அரசு பள்ளியில் பயின்று அதன் பின் பன்னிரெண்டாம் வகுப்பு தனது ஊர் அருகே உள்ள புனல்வாசலில் படித்து வந்துள்ளார் பனிரெண்டாம் வகுப்பில் பள்ளியிலே முதல் மதிப்பெண் பெற்ற சிவகுரு பிரபாகரன் தான் பொறியாளர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த நிலையில் குடும்பத்தில் நிலை புரிந்து குடும்பதினர் புதுக்கோட்டையில் டீச்சர் டிரெய்னிங் சேர்க்க தினசரி வீட்டில் இருந்து சென்று படித்து வந்துள்ளார், ஆரம்பத்தில் தனது வீட்டில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று வந்த நிலையில் தினசரி பேருந்து கட்டணமாக ரூபாய் 50 கொடுக்க முடியாத சூழ்நிலையில் குடும்பம் இருந்து வந்ததை உணர்ந்த பிரபாகரன் தனது தாயின் சகோதரி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார், அதன் பின் தனது தந்தையுடன் மர அறுவை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார் அதன் பின்
தொடர்ச்சியாக நண்பர் ஒருவர் நுழைவு கட்டணதிற்கு பண உதவி செய்ய வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில் சிவில் இஞ்சீனியரிங் படிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது நான்கு ஆண்டுகள் படித்து கொண்டே ஐஐடியில் சேர்வதற்காக பயிற்சி பெற்று வந்துள்ளார் அதன்படி ஐஐடி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று இடம் கிடைக்க இரண்டு ஆண்டுகள் எம்.டெக் பயின்றுள்ளார் அதன் பின் ஜஆர்எஸ் யில் தேர்ச்சி பெற்று இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வந்துள்ளார் அதன்பின் முயற்சியைக் கைவிடாத பிரபாகரன் ஐஎப்எஸ்,ஐஎஸ் யிலும் தொடர்ச்சியாக தேர்ச்சி பெற்று தற்போது சப். கலெக்டராக திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து "கொள் படித்தது போதும் வேலைக்கு செல்" என தாய் அடிக்கடி அறிவுறுத்திய நிலையிலும் தன்னம்பிக்கையோடு நான் தொடும் தூரம் உயரம் என கூறி தாய்க்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி தொடர் முயற்சியின் மூலம் சாதனை படைத்துள்ளார் அரசுப் பள்ளியில் பயின்று சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காண்பிப்பது அது மட்டும் இல்லாமல் அப்பகுதி இளைஞர்கள் மாணவர்களிடையே தன்னம்பிக்கையும் வைத்துள்ளார், மிகவும் எளிமையான தோற்றமும் எளிமையான சுபாவம் கொண்டு, தன்னார்வ இளைஞர்களுடன் பகுதியில் சேர்ந்து மரக்கன்று நடுதல் பனை விதை விதைத்தல் ஊர் குளத்தை சுத்தம் செய்தல் என அனைத்து நற்பலன்களையும் செய்து சிவகுரு பிரபாகரன்

பேட்டி 1, : கனகா (அம்மா)

பேட்டி 2, : மாரிமுத்து (தந்தை)

குறிப்பு :
சிவகுரு பிரபாகரன் பேட்டி திருநெல்வேலி செய்தியாளரிடம் வாங்கிக் கொள்ளப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுConclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.