நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் சில தினங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் விக்னேஷ் என்கிற மாணவன் நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்து கொண்டான்.
இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழ்நிலையில், தஞ்சாவூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலையிடம் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அகற்றி கீழே கொண்டு வந்தனர். மீண்டும் மாணவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இதனால் காவல் துறையினருக்கும், இந்திய மாணவர் சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீரென மாணவர்கள் ஜெயலலிதா சிலை முன்பு ஏறி மனு அளித்து போராட்டம் நடத்தியதால் தஞ்சையில் பரபரப்பாக காணப்பட்டது.