தஞ்சாவூர்: வெளி மாவட்டங்களிலிருந்து அனுமதியின்றி நெல் மூட்டைகள் தஞ்சாவூருக்கு கடத்திவந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கப்படுவதாகப் புகார்கள் தொடர்ந்து வந்தன.
இந்தப் புகாரையடுத்து தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அனுமதியின்றி கடத்திவரப்பட்ட ஏழு லாரிகளில் 120 டன் எடை கொண்ட இரண்டாயிரம் ஆயிரம் நெல் மூட்டைகள் பறிமுதல்செய்யப்பட்டன.
இந்த மூட்டைகளானது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அலுவலத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் அரிசியை கடத்தியவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: 3,600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்: போலீசார் விசாரணை!