தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்கள் கொண்டுவந்து பதுக்கி வைக்கப்பட்டு, சிலர் அங்கிருக்கும் கடைகளுக்கு சில்லறையாக விற்பனை செய்யப்படுவதாக, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மகாதேவன் மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிவேல் ஆகியோர் தலைமையில் சோதனை வேட்டையில் இறங்கிய காவல்துறையினர், சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஒன்றை டன் எடையுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜராஜன், ரூபி சந்த் மற்றும் ராம்ரமேஷ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.