கும்பகோணம் மாதுளம்பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்த வினோத் (45). இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 20) மாதுளம்பேட்டை தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்த அவரை மர்மநபர்கள் பலத்த ஆயுதங்களால் சரமாரியா தாக்கிவிட்ட தப்பியோடினர்.
அதன்பின் அவரை வாகனவோட்டிகள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: எனக்கு கரோனா தொற்றால் பாதிப்பு ஏற்படாததற்கு காரணம் உடற்பயிற்சி... முதலமைச்சர் ஸ்டாலின்...