தஞ்சை: தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த சொகுசு கார் மீது, மற்றொரு சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஊரணிபுரம் திமுக நகரச் செயலாளர் சஞ்சய்காந்தி, திமுக சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் ஷேக் முகமது ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுந்தர், ராஜா, ரமேஷ் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்கள் மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.