ETV Bharat / state

மாமன்னர் ராஜராஜ சோழன் எந்த சாதி? வைரலாகும் போஸ்டர்கள்! - thanjavur news

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், அவருக்கு சாதி அடையாளங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாமன்னர் இராஜராஜ சோழன் எந்த சாதி? வைரலாகும் போஸ்டர்கள்!

author img

By

Published : Nov 5, 2022, 2:45 PM IST

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருண்மொழிவர்மனின் 1037-வது சதய விழா தஞ்சாவூரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அதனை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் ஒருவர் புகழின் உச்சிக்கு சென்றால் அவரது சாதிய பின்புலத்தை தேடும் பிற்போக்குத்தனமான பழக்கம் உள்ளது. அதேநேரத்தில் முற்காலத்தில் தமிழகத்தில் சாதி என்ற ஒன்றே இல்லை என்று கூறுபவர்களும் உண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக அகழ்வாய்வுகளில் சாதி இருந்ததற்கான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பல மன்னர்களின் பெயர்களுக்கு பின்னால் சாதி அடையாளம் என்ற ஒன்று இல்லை. குறிப்பாக மூவேந்தர்கள் என அழைக்கப்படும் சேர, சோழ, பாண்டியர்களின் பெயர்களுக்கு பின்னால் சாதி அடையாளங்கள் இருந்ததில்லை.

மாமன்னர் இராஜராஜ சோழன் எந்த சாதி? வைரலாகும் போஸ்டர்கள்!
மாமன்னர் இராஜராஜ சோழன் எந்த சாதி? வைரலாகும் போஸ்டர்கள்!

இந்த நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போஸ்டர், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ராஜராஜ சோழனுக்கு சாதி முத்திரை குத்தப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜராஜ சோழன் உடையார், ராஜராஜ சோழ நாடார், சோழ மறவன் ராஜராஜன், வன்னிய குல சத்திரியர் ராஜராஜ சோழன்,சோழ வெள்ளாளர், ராஜராஜ சோழன் தேவர் என்ற அடைமொழியுடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ் வரலாற்றின் மாபெரும் பொக்கிஷங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சோழர் வரலாற்றை இப்படி சாதிய அடையாளங்களுக்கு சுருக்குவது தமிழர்களுக்கு அழகல்ல என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "இந்தி என்ற பெயரில் இந்துத்துவா" - ஆ.ராசா குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.