ETV Bharat / state

தஞ்சாவூர்: அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்.. 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு! - போக்குவரத்து பாதிப்பு

கும்பகோணம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில், சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரத்திற்கும் மேலாக கும்பகோணம் - சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 19, 2023, 4:54 PM IST

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள நத்தம் கிராம சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இது குறித்து நத்தம் கிராம மக்கள் பல அரசு அலுவலர்களைச் சந்தித்து முறையிட்டும், பலமுறை போராட்டங்களை நடத்தியும் பலனில்லை. இந்நிலையில் நத்தம் கிராமத்தில் உள்ள வாய்க்காலைத் தூர் வாரும் பணி நடைபெற்றது அப்போது தூர் வாரிய மண்ணை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்தாமல், குறுகிய சாலையின் பக்கவாட்டிலேயே கொட்டி இருந்தனர்.

தற்போது இரு நாட்களாக இப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால், சாலையோரம் கொட்டப்பட்ட மண் சரிந்து சாலை முழுவதும் சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது இதனால் அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர், விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் எனப் பொதுமக்கள் சறுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படும் ஆபத்தான சூழல் உள்ளது.

இதற்கிடையே இன்று (ஜூன் 19) பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ சாலை இருந்த சகதியில் சறுக்கி, வாய்க்காலில் கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. அதிஸ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து நூற்றுக்கணக்கானோர் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உடனடியாக சம்மந்தப்பட்ட சாலையை அகலப் படுத்த வேண்டும், நத்தம் பேருந்து நிறுத்தத்தில் நகரப் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலைத் தொடர்ந்தனர். இந்த மறியலின் காரணமாக மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனை அடுத்து, இந்த மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு தாலுகா காவல் ஆய்வாளர் கவிதா, கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் உள்ளிட்ட பலர் வருகை தந்து சம்பவயிடத்தை நேரில் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும், சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரை அலைத்து சாலையில் உள்ள சகதியை உடனடியாக சரிசெய்ய உத்தரவிடப்பட்டது மற்றும் இரண்டு மாதங்களில் புதிய சாலை அமைத்துத் தருவதாகவும் வாக்குறுதி வழங்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் காரணமாகக் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மற்றும் பெரும்பாலான வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இரவு நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பலூன்.. வேலூரில் திகில் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.