தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதியை கண்டித்து பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது அவர்கள் கூறுகையில்,
”ஆர்.எஸ். பாரதி தொடர்ந்து உயர்பதவிகளில் உள்ள பட்டியலின மக்களை தரம் தாழ்ந்து, இழிவாக பேசி வருகிறார் இதனை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கண்டிக்கவில்லை” என தெறிவித்தனர்.
தரம் தாழ்ந்து விமர்சிக்கும் ஆர்.எஸ். பாரதியை கண்டித்தும், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரியும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கண்டித்தும் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைகளில் மு.க. ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ். பாரதியின் படங்கள், பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்