ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர் போஸ்கோவில் கைது! - Man arrested for molesting 14-year-old girl

தஞ்சாவூர்: 14 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த நபரை வல்லம் அனைத்து மகளிர் காவல்துறை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.

சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த  பால்ராஜ்

author img

By

Published : May 20, 2020, 11:13 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (43). இவர் ஜவுளி கடைகளுக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜென்டாக வேலை பார்த்து வருகிறார். இவர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2019ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுகோட்டையில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.

மேலும் சிறுமியின் குடும்ப வறுமையை பயன்படுத்தி திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அச்சிறுமியை மேட்டுப்பட்டி அழைத்துச் சென்று அவருடன் பலவந்தமாக உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திருமணம் நடந்த சில நாட்களிலேயே சிறுமியின் தாய் இறந்துவிட்டார். சிறுமியை மேட்டுப்பட்டிக்கு அழைத்து வந்து பால்ராஜ் கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து சிறுமிக்கு 20 வயது பூர்த்தி அடைந்து விட்டதாக போலி சான்றிதழ் வாங்கி, தஞ்சாவூரில் ஒரு விடுதியில் சிறுமியை வேலைக்கு சேர்த்துள்ளார். இந்நிலையில், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சிலருடன் பால்ராஜுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் அளிக்கும்படி பால்ராஜ் சிறுமியை மிரட்டி உள்ளார்.

அப்படி ஒரு சம்பவம் நடக்காத நிலையில் போய் புகார் கொடுக்க மறுத்த சிறுமியை பால்ராஜ் தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பி வந்த சிறுமி வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்தது கூறியதையடுத்து, விசாரணை செய்த காவல்துறை பால்ராஜை குழந்தை திருமண தடுப்புச் சட்டமான போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சிறுமியை திருமணம் செய்த இளைஞர்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.