ETV Bharat / state

பட்டுக்கோட்டை நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - தஞ்சாவூர்

பட்டுக்காேட்டை நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் சிவசேனா கட்சியினர் தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest
author img

By

Published : Oct 16, 2020, 12:00 AM IST

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் சுகாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் நகராட்சி பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று குற்றஞ்சாட்டி சிவசேனா கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் புலவஞ்சி போஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அதேபோல் பண்ணவயல் சாலையின் அருகே சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் வகையில் பட்டுக்கோட்டை நகராட்சியில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், இதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பட்டுக்கோட்டை நகராட்சியைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் விவேகானந்தன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஒன்று திரண்டு நகராட்சிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : பாஜக யாத்திரை- அனுமதி கேட்டு டிஜிபியிடம் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.