ETV Bharat / state

சாலையில் கிடந்த பணம் - உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு! - முருக்கங்குடி

கும்பகோணம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த பணத்தை, வாட்ஸ்அப் மூலம் தகவல் பரப்பி உரியவரிடம் கொண்டு சேர்த்த மர வியாபாரியை காவலர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர்.

police-praise-the-person-who-handed-over-the-money-lying-on-the-road
சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மர வியாபாரி- போலீஸ் பாராட்டு!
author img

By

Published : Jul 20, 2021, 12:27 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம், முருக்கங்குடியை சேர்ந்தவர் ராமதாஸ். மர வியாபாரியான இவர், கடந்த 17ஆம் தேதி இரவு நாச்சியார்கோவில் அருகே சீனிவாசநல்லூர் பைபாஸ் சாலையில் நடந்து சென்றபோது ரூ.20 ஆயிரத்து 400 பணம் கத்தையாக கிடப்பதை பார்த்துள்ளார். அதனை எடுத்து அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்துள்ளார்.

பின்னர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆப்ரேட்டராக உள்ள தனது நண்பர் பாஸ்கரிடம் பணம் சாலையில் கிடந்தது குறித்தும், அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து எவ்வளவு பணம், எந்த இடத்தில் கிடந்தது என்பது குறித்த தகவல்களை வாட்ஸ்ப் குழுக்களில் அவர் பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்த உப்பிலி அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தன்னுடைய பணம் என்றும், கடந்த 17ஆம் தேதி சாலையில் தவற விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மர வியாபாரி- போலீஸ் பாராட்டு!

இதனை தொடர்ந்து இன்று நாச்சியார் கோவில் காவல் நிலையத்திற்கு அவர் வரவழைக்கப்பட்டார். அவரிடம் காவல் ஆய்வாளர் செல்வி பணம் தொலைந்து போனது குறித்து விசாரித்தார். விசாரணையில், அவர் பணம் என்பது உறுதியான நிலையில், 20,400 ரூபாய் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பணத்தை பறிகொடுத்து தவித்த உப்பிலி, ராமதாஸுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும், கீழே கிடந்த பணத்தை எடுத்து உரியவர்களிடம் நேர்மையாக ஒப்படைத்த ராமதாசுக்கு ஆய்வாளர் செல்வி சால்வை அணிவித்து மலர்கொத்து வழங்கி பாராட்டினார்.

இதையும் படிங்க: வறுமையிலும் நேர்மை: சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த பெண்ணுக்கு குத்துவிளக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.