ETV Bharat / state

பட்டுக்கோட்டையில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண் சிசுவின் உடல் - போலீசார் விசாரணை - கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண் சிசுவின் உடல்

பட்டுக்கோட்டையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசுவை கழிவு நீர் சாக்கடையில் வீசிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டையில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண் சிசுவின் உடல்

author img

By

Published : Feb 20, 2023, 9:16 PM IST

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை நகராட்சியில் காந்தி பூங்கா அருகில் உள்ள கழிவு நீர் கால்வாயில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசுவின் உடல் இறந்த நிலையில் கிடப்பதை அப்பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்ட நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து உடனடியாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலையடுத்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் நகராட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த ஆண் சிசுவின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசியவர்கள் யார் அல்லது தவறான வகையில் பிறந்த குழந்தையை இதுபோல் சாக்கடையில் வீசிவிட்டு சென்றார்களா எனவும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் சிசுவின் உடல் கழிவு நீர் கால்வாயில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: விவசாய நிலத்தை வளைத்துப்போட முயலும் தம்பிதுரை?; மின் இணைப்பு வழங்கவிடவில்லை என புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.