குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வன்முறையை தூண்டிவிட்டதாகக் கூறி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்தனர். இதனைக் கண்டித்து அந்த அமைப்பின் சார்பில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் குலாம் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
ஒரு ஜனநாயக போராட்டத்திற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டிருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ் அகமது, அம்மாநில செயலர் முகமது இலியாஸ், மாநில அலுவலக செயலாளர் முகீத் ஆகியோர் டெல்லி காவல் துறையால் காவலில் வைக்கப்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நீலப்புலிகள் இயக்கம், எஸ்.டி.பி.ஐ, தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணி: முத்தரசன்