ETV Bharat / state

தஞ்சாவூரில் காவலருக்கு கரோனா பாதிப்பு - தஞ்சாவூரில் காவலருக்கு கரோனா பாதிப்பு.

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் காவலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

Corona in Thanjavur
Corona positive for police man
author img

By

Published : May 23, 2020, 4:28 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவிலடி திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 23). இவர் சென்னையில் சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், அவரது சொந்த ஊரான கோவிலடி கிராமத்திற்கு கடந்த 19ஆம் தேதி சென்றார். பின்னர் மீண்டும் 20ஆம் தேதி திருச்சியில் பணியில் சேர சென்றபோது, அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இரவு 11 மணி அளவில் அரவிந்தனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதிக்கு சீல் வைத்து ஊரின் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து, பிளிச்சிங் பவுடர் போடவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க: பசுமை மண்டலத்திற்குத் தயாராகும் அரியலூர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.