ETV Bharat / state

‘வீடுதோறும் விருட்சம்’ என்ற திட்டத்தின்கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடத்திட்டம் - வீடு தோறும் விருட்சம்

தஞ்சை மாவட்டத்தில் 'வீடு தோறும் விருட்சம்' என்ற திட்டத்தின்கீழ், ஓராண்டுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat வீடு தோறும் விருட்சம் திட்டத்தை செயல்படுத்திய ஆட்சியர்

author img

By

Published : Aug 18, 2022, 10:19 PM IST

தஞ்சாவூர் மாவட்ட பரப்பில், சராசரி மரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதனை அதிகரிக்கும் வகையில், ’வீட்டிற்கு ஒரு விருட்சம்’ என்ற திட்டம் அரசுத்துறைகளுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் மாவட்டம் முழுவதும் சுற்றுச்சுவர் அல்லது மரக்கூண்டுடன் மற்றும் ஓராண்டு காலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு, அதனை மரமாக்கப்பாடுபடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இத்திட்டத்தினை பள்ளி மாணவர்கள் வாயிலாக, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரம் வழங்கப்பட்டு, அவர் அதனை முறையாகப் பராமரித்து மரமாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பை வழங்குகின்றனர். அதன்படி இத்திட்டத்தின் கீழ் இதுவரை மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் பாதுகாப்பான முறையில் நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் இன்று நண்பகல் கும்பகோணம் நேட்டிவ் மேனிலைப்பள்ளி மைதானத்தில், பள்ளிக்கல்வித்துறை, கும்பகோணம் கல்வி மாவட்டம், கவின்மிகு தஞ்சை இயக்கம், ராமநாதபுரம் மெழுகுவர்த்தி நண்பர்கள் இயக்க முத்துக்குமார், நேட்டிவ் முன்னாள் மாணவரும், ஊழலற்ற மக்கள் இயக்க பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து இந்த மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.

இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்வில் இப்பள்ளியைச்சேர்ந்த என்எஸ்எஸ், சாரணர், இளையோர் செஞ்சிலுவைச்சங்கம், பசுமை இயக்கம், ஆகியவற்றைச்சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

வீடு தோறும் விருட்சம் திட்டத்தை செயல்படுத்திய ஆட்சியர்

நிகழ்ச்சியின் நிறைவில், செய்தியாளர்களைச் சந்தித்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், “தஞ்சை மாவட்டத்தில், வீடுதோறும் விருட்சம் என்ற திட்டத்தின் கீழ், ஓராண்டு இலக்கான, ஒரு லட்சம் மரக்கன்றுகளை, மாவட்டம் முழுவதும் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் இந்த இலக்கு முழுமையாக எட்டப்படும். இதுவரை இத்திட்டத்தின்கீழ் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது மாவட்டத்தில் குறைவாக உள்ள மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பாக அமையும்” எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் மேல்முறையீடு மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.