கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி மக்கள் ஊரடங்கு கடைபிடிக்குமாறு தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து இயங்காமல், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தனர்.
இதனிடையே சில வாகனங்கள் நகரின் பல பகுதிகளில் சாலையில் சென்றுகொண்டிருந்த நிலையில், தஞ்சை வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே வாகனங்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்தச் சாலையின் ஓரமாக 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் அமர்ந்திருந்தார். இதனைக் கண்ட மோட்டார் வாகன ஆய்வாளர் நெடுஞ்செழியன் அந்த மூதாட்டி யார் என்று விசாரணை செய்து உணவு உட்கொள்வதற்காக பணம் வழங்கினார்.
கருணை உள்ளத்தோடு அவர் செய்த இந்தச் செயல் அப்பகுதியில் இருந்த அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி கடைகளை மூடவைத்த நகராட்சி அலுவலர்கள்!