தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செங்கிப்பட்டி பகுதியில் கிழிந்த உடையுடனும் உடலில் ரத்த காயங்களுடனும் பெண் ஒருவர் கிடப்பதை கண்ட மக்கள், மாதர் சங்கத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாதர் சங்கத்தினர் அப்பெண்ணை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நடக்க முடியாத நிலையில் இருந்த அந்த பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பதும் பெங்களூருவில் குடும்பத்தினருடன் தங்கி இருந்ததாகவும் ஐந்து மாதங்களுக்கு முன்பு தஞ்சையில் ஒரு நபர் வீட்டு வேலைக்கு சேர்த்து விட்டதாகவும், அந்த வீட்டின் உரிமையாளர்கள் அடித்து துன்புறுத்தியதும் தெரியவந்தது.
மேலும் அந்த பெண்ணை, வெள்ளை நிற வாகனத்தில் ஏற்றி வந்து பல்வேறு கொடுமைகள் செய்து வாகனத்தில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக அவர் வாக்கு மூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாதர் சங்கத்தினர் தெரிவித்த போது, "அப்பெண் கூறுவதை வைத்து பார்த்தால் பல நபர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும். அதற்காக மாதர் சங்கம் அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க; மதுபோதையில் மகள் மீது பாலியல் வன்முறை: தந்தை கைது