ETV Bharat / state

"2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை" - டிடிவி தினகரன்..! - 2024 parliment election

TTV Dinakaran Press Meet: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்
TTV Dinakaran
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 3:52 PM IST

"2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை" - டிடிவி தினகரன்!

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.16) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை வகித்தார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "நாடாளுமன்றத்தில் இந்தியாவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், எம்பிக்கள் என அனைவரும் கூடும் இடம். அங்குச் சரியான பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமை. அதேபோல் நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்வதும் மத்திய அரசின் கடமை ஆகும்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் எம்பிக்களை இடை நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை. இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். சென்னையில் பேரிடர் தொடர்பாகத் தமிழ்நாட்டிற்கு அரசாங்கம் கோரிய நிதியை மத்திய அரசு கொடுத்து உதவிட வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றார்.

காவிரி ஆறு என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்சனை, மக்களின் பிரதிநிதிகளாக எல்லா அரசியல் கட்சிகளும் மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். அது சட்டத்துக்குப் புறம்பானது என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் போராடுவது அவர்களது அடிப்படை உரிமை" என தெரிவித்தார்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆக்கிரமிப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் நாங்கள் எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று எப்போதும் நான் கூறியதில்லை.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திமுக என்ற தீய சக்தியை எதிர்த்துப் போராட வேண்டும் என்று தான் கூறியுள்ளேன். உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைவார்கள், சுயநலவாதிகள், பதவி வெறி பிடித்தவர்கள், பண வெறி பிடித்தவர்கள் அதற்கு ஒத்துவர மாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை" என தெரிவித்தார்.

மேலும், இக்கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் அருகே நடுக்காட்டில் வந்திறங்கிய ஹெலிகாப்டர்.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.