தஞ்சாவூர்: 2023 ஆங்கில புத்தாண்டையொட்டி(New Year 2023), தஞ்சை மாநகரின் பல்வேறு கோயில்கள், தேவாலயங்களில் இன்று (ஜன.1) சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் (Thanjavur Big Temple) உள்ள பெருவுடையாருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி உள்ளிட்ட 32 வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சிவபெருமானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைப்போல் தஞ்சை கோடியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: NewYear 2023: வைத்தீஸ்வரன் கோயிலில் வெளிமாநிலத்தவர்கள் கும்மிகொட்டி சாமி தரிசனம்