தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தஞ்சை, மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ராமலிங்கம்,
தஞ்சை சட்டப்பேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து அவர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் அடைப்பேன் என்றும், யார் தடுத்தாலும் இந்த ஸ்டாலின் விட மாட்டேன் என்றும் பேசினார்.
மேலும், கடந்த காலங்களில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது போல் வரும் காலத்திலும் ஆட்சி அமைந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும், அதிமுக அரசு ஏழு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.