ETV Bharat / state

'உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 100% ஆகும்' - அமைச்சர் சிவசங்கர் பேச்சு

தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 52 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக வரும் 5 ஆண்டுகளில் அதிகமாகும் என தஞ்சாவூரில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 13, 2023, 8:23 PM IST

'உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 100% ஆகும்' - அமைச்சர் சிவசங்கர் பேச்சு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை சார்பில் தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம் அறக்கட்டளை, முதலாம் ஆண்டு விழா இன்று (மே.13) நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் 'படைப்பாளர் விருது' மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'மத்திய அரசு உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை 51 சதவீதமாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்குக் காரணம், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், உயர்கல்வி பெறுபவர்கள் எண்ணிக்கை 26 சதவீதமாக உள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே, உயர்கல்வி பெறுபவர்கள் எண்ணிக்கை 52 சதவீதமாக உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 100% உயர்கல்வி பெறுகின்ற சூழல் வரும், 'புதுமைப் பெண்' என்ற மகத்தான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தால் வருகின்ற காலத்தில் பெண்கள் அனைவரும் கல்லூரி கல்வியை முடிப்பார்கள். அப்போது பெண்கள் கல்லூரி கல்வியை முடிக்கின்ற அதே வேளையில் ஆண்களும் கட்டாயமாக முடிக்க வேண்டும் என்ற சூழல் வரும்போது, வரும் 5 ஆண்டுகள் காலத்தில் தமிழகம் நூறு சதவீதம் கல்வி அறிவு பெறும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்விழாவில் எம்எல்ஏ சந்திரசேகரன், மேயர் ராமநாதன் மற்றும் தாய் தமிழ் பள்ளிகள் நிறுவனர் பாபுராஜேந்திரன், பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன், அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை தலைவர் குறிஞ்சி வேந்தன் உள்ளிட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம் - அண்ணாமலையை சீண்டிய தருமபுரி எம்.பி.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.