தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு உணவு மற்றும் பாதுகாப்பு துறை சார்பில், ”ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது கடந்த ஆட்சியில் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் பெறுவதை கைவிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மீறி யாரவது லஞ்சம் பெற்றால் அவர்கள் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் பணி செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.