தஞ்சை:கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், ரூபாய் 2 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ராஜ்யசபா உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் தலைமையில், அரசு கொறடா கோவி செழியன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும், அறிவியல், கணிணி ஆய்வு கூடங்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய நடவடிக்கையால் அவர் மீது நம்பிக்கை கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு பள்ளிகளில் சேரும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உயரும் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிதாக கூடுதல் ஆசிரியர் நியமனமும், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் அடுத்தடுத்து திறக்கப்பட்டும் வருகிறது. தமிழகம் முழுவதும் இத்தகைய கல்வி வளர்ச்சிக்காகவும், பள்ளிக் கூடங்கள் மேம்படவும் அந்த பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும் உதவிட வேண்டும்' என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில், கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் கும்பகோணம் காயத்ரி அசோக்குமார், திருவிடைமருதூர் சுபா திருநாவுக்கரசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: Exclusive: “இலங்கையின் தற்போதைய நெருக்கடி உள்நாட்டுப் போரை விட மோசமானது ”- இலங்கை கப்பல் நிறுவன முன்னாள் தலைவர்