ETV Bharat / state

கும்பகோணத்தை மாவட்டமாக்க வேண்டும் - மதிமுக போராட்டம் - MDMK Party

தஞ்சாவூர்: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

MDMK protest
MDMK protest
author img

By

Published : Aug 20, 2020, 12:47 AM IST

தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி வணிகர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள், பொது மக்கள் ஆகியோரின் 25 ஆண்டு கால கோரிக்கையாகும். முற்கால சோழர் ஆட்சி காலத்திலும், அதனை தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், கும்பகோணம் தலைநகராக இருந்துள்ளதை பல ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது. அத்தகைய வரலாற்று ஆன்மிக சிறப்பு கொண்ட கும்பகோணத்தை மீண்டும் தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்.

புதிய மாவட்டம் அமைக்க, அனைத்து துறை ரீதியிலான கட்டமைப்புகளையும் கொண்டுள்ளதாலும், பொது மக்களின் நலன் கருதியும், அரசின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் நாச்சியார்கோயில், திருப்பனந்தாள், அம்மாப்பேட்டை ஆகிய மூன்று தனி புதிய வட்டங்களை ஏற்படுத்தி கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மதிமுக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கும்பகோணத்தை விரைவில் தனி மாவட்டமாக ஆக்குவேன் என்று உறுதிமொழி அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனி மாவட்டம் அமைக்க கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் காந்தி பூங்கா அருகில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.