ETV Bharat / state

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - 13ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு - protest against karnataka

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக முதலமைச்சரை கண்டித்து வருகின்ற 13ஆம் தேதி அம்மாநில முதலமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் அறிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு
author img

By

Published : Jul 8, 2021, 12:15 PM IST

தஞ்சாவூர்: காவிரி உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 7) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

உண்மை கண்டறியும் குழு

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், " கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் தொடக்க பணியைத் தொடங்கி விட்டதா என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உண்மை கண்டறியும் குழு அனுப்ப வேண்டும். அவ்வாறு அணை கட்டுவதற்கான ஆரம்ப பணியைத் தொடங்கினால் உச்சநீதிமன்றத்தில் தடையாணை கோர வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு

இனவிரோத போக்குடன் செயல்படுகிறது

ஒன்றிய அரசு கர்நாடக அரசிடம் இருந்து பெறப்பட்ட மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை திரும்பப் அளிக்க வேண்டும். கர்நாடக அரசு அணை கட்டும் பணியை நிறுத்தவில்லை என்றால் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும்.

கர்நாடக அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். கர்நாடக அரசு இனவிரோத போக்குடன் நடந்து கொள்கிறது. இதுபோன்ற தமிழ்நாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் கர்நாடக அரசை கண்டிக்கும் வகையில் வருகின்ற 13 ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை திருச்சியில் இருந்து கடலூர் வரை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்குப் பிரேமலதா கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.