தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆண்டி நத்தம் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லியோ பாஸ்டின். டூவீலர் மெக்கானிக்கான இவர் கடந்த 40 ஆண்டுகளாக வீட்டில் மின்னிணைப்பு இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் ஒரத்தநாடு நகர்ப் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி, எனது வீட்டிற்கு உடனடியாக மின் ஊழியர்கள் வந்து மின் இணைப்பு கொடுக்க வேண்டும், இல்லை என்றால் செல்போன் கோபுரத்தில் இருந்து குதித்து விடுவேன் என மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஒரத்தநாடு காவல் துணை கண்காணிப்பாளர் காமராஜ், காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, தீயணைப்பு ஆய்வாளர் பொன்னுசாமி, வட்டாட்சியர் அருள்ராஜ், மின் வாரிய அலுவலர்கள் உள்ளிட்டோர் வந்து, சுமார் மூன்று மணி நேரமாக லியோ பாஸ்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின் ஒரு வழியாக சமாதானத்திற்கு வந்த லியோ பாஸ்டின் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கினார். அதன் பின் அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு, அதன் பின் ஒரத்தநாடு தாலுகா அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.