கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்திவருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பின்றியும், வருவாயின்றியும் தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தரத்தை மேம்படுத்தவும், கார்ப்பரேட் மருத்துவமனைகளை அரசுடைமையாக்கவும், ஊரடங்கை ரத்து செய்து இ-பாஸ் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பொது போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீதிமன்ற ரவுண்டனா பகுதியில் அமைப்பின் நகர ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: கால்டாக்ஸி, மேக்ஸி கேப் வாகனங்களை இயக்க அனுமதிக்ககோரி ஓட்டுநர் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்