ETV Bharat / state

ஒளி வெள்ளத்தில் ஜொலித்த கல்லணை: இன்று தண்ணீர் திறப்பு!

தஞ்சை: கல்லணையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள், எட்டு மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு மின்விளக்கு அலங்காரத்தில் கல்லணை ஜொலித்தது கண்கவர் காட்சியாக இருந்தது.

author img

By

Published : Jun 16, 2020, 7:31 AM IST

கல்லணை
கல்லணை

டெல்டா பாசன விவசாயிகள் இந்தாண்டு வழக்கம்போல குறுவை, சம்பா சாகுபடி விவசாயம் மேற்கொள்ள ஏதுவாக மேட்டூரில் கடந்த 300 நாள்களுக்கும் மேலாக 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு இருப்பதைத் தொடர்ந்து 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா பகுதி மக்களின் விவசாய பாசனத்திற்காகவும், பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையிலும் தண்ணீரை மேட்டூரிலிருந்து திறந்துவைத்தார்.

அந்த நீரானது கரூர், திருச்சி வழியாக கல்லணைக்கு நேற்று (ஜூன் 15) அதிகாலை வந்துசேர்ந்தது. அதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் என அனைத்து ஆறுகளிலும் உள்ள சட்ரஸ்கள் ஏற்றி இறக்கப்பட்டு சரியானபடி இயங்குகிறதா என்று ஆய்வுசெய்து கிரீஸ் போடப்பட்டு, வர்ணம் பூசப்பட்டுள்ளது.

ஜொலிக்கும் கல்லணை
ஜொலிக்கும் கல்லணை

மேலும் அணைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டு அங்குள்ள அகத்தியர் சிலை, மீன் பிடிக்கும் மீனவர் சிலை, நெற்கதிர் தூக்கிச் செல்லும் பெண் சிலை, கரிகாற்சோழன் சிலை, ராஜராஜன் சிலை என அனைத்து சிலைகளும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவைப் பெற்றுள்ளன.

இதனால் டெல்டா குடிமக்கள் அனைவரும் தண்ணீரை எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

இந்தத் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் எம்.பி. வைத்தியலிங்கம், அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி - திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள், இந்த மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மேலும் பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதால் கல்லணையில் அனைத்து இடங்களும் மின் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளதால் தற்போது கல்லணையானது விழாக்கோலம் போல காட்சியளிப்பதைக் காண முடிகிறது.

இதையும் படிங்க: முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி நீர் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.